/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரேஷன் புகார் பதிவேடு பராமரிக்க அறிவுரை ரேஷன் புகார் பதிவேடு பராமரிக்க அறிவுரை
ரேஷன் புகார் பதிவேடு பராமரிக்க அறிவுரை
ரேஷன் புகார் பதிவேடு பராமரிக்க அறிவுரை
ரேஷன் புகார் பதிவேடு பராமரிக்க அறிவுரை
ADDED : ஜூலை 10, 2024 11:38 PM

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களில் காலியாக இருந்த உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. புதிய பணியாளர்களுக்கான பயிற்சி முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டுறவு இணைபதிவாளர் சீனிவாசன் துவக்கிவைத்தார். புதிதாக சேர்ந்துள்ள 71 பணியாளர்கள், பங்கேற்றனர்.
''ரேஷன் கடைகளுக்குள் மூன்றாம் நபரை அனுமதிக்க கூடாது. அனைத்து ரேஷன் கடைகளையும் கண்காணித்து, துாய்மையாகவும், சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்யவேண்டும். உணவுப் பொருட்களில் விலை பட்டியல் விவரங்கள் அடங்கிய தகவல் பலகைகள் கட்டாயம் வைக்கப்பட்டிருக்கவேண்டும். கார்டுதாரர்கள், ரேஷன் கடை சார்ந்த நிறை, குறைகளை தெரிவிக்க ஏதுவாக, புகார் பதிவேடு வைத்து பராமரிக்கவேண்டும்.
''ரேஷன் கடையில் இருப்பில் உள்ள பொருட்கள் அளவும், பதிவேட்டில் உள்ள பொருட்கள் இருப்பு அளவு சரியாக உள்ளதா என சரிபார்க்கவேண்டும்'' என்று பயிற்சியில் அறிவுறுத்தப்பட்டது.