/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசு பள்ளி முதல் வகுப்பில் 6373 குட்டீஸ் சேர்க்கை அரசு பள்ளி முதல் வகுப்பில் 6373 குட்டீஸ் சேர்க்கை
அரசு பள்ளி முதல் வகுப்பில் 6373 குட்டீஸ் சேர்க்கை
அரசு பள்ளி முதல் வகுப்பில் 6373 குட்டீஸ் சேர்க்கை
அரசு பள்ளி முதல் வகுப்பில் 6373 குட்டீஸ் சேர்க்கை
ADDED : ஜூன் 24, 2024 01:24 AM
திருப்பூர்:இந்தக் கல்வியாண்டில், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில், 6,373 மாணவ, மாணவியர் இணைந்துள்ளனர்.
இந்த கல்வியாண்டில் திருப்பூர் கல்வி மாவட்டத்தில், ஜூன் முதல் வாரம் வரை, எல்.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரை, 2,031 மாணவர்கள், 1,854 மாணவியர் என 3,885 அரசு பள்ளியில் இணைந்துள்ளனர். அதிகபட்சமாக, முதல் வகுப்பில், 3,170 பேர் இணைந்துள்ளனர்.
இதில் திருப்பூர் வடக்கு வட்டாரம், 768 பேர், அவிநாசி, 583, பல்லடம், 508, திருப்பூர் தெற்கு, 420, பொங்கலுார், 362, காங்கயம், 193, ஊத்துக்குளி, 97 பேர் ஆவர். மாணவியரை விட (1,006) மாணவரே அதிகமாக (1075) ஒன்றாம் வகுப்பில் இணைந்துள்ளனர்.
தாராபுரம், குண்டடம், மூலனுார், வெள்ளகோவில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களை உள்ளடக்கிய தாராபுரம் கல்வி மாவட்டத்தில், 1,570 மாணவர், 1,633 மாணவியர் என, 3,203 பேர் ஒன்றாம் வகுப்பிலும், 897 மாணவர், 740 மாணவியர் என, 1,637 பேர் ஆறாம் வகுப்பிலும் இணைந்துள்ளனர்.