ADDED : ஜூன் 20, 2024 05:22 AM
அனுப்பர்பாளையம்புதுார் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதி, 15 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டது.
திறப்பு விழா நேற்று நடந்தது. முன்னாள் கவுன்சிலர் விஸ்வநாதன், தலைமை வகித்தார். கவுன்சிலர் அனுசுயா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி வரவேற்றார். எம்.எல்.ஏ., விஜயகுமார், கூடுதல் வகுப்பறையை திறந்து வைத்தார். மாநகராட்சி முதலாம் மண்டல தலைவர் உமா மகேஸ்வரி, மரக்கன்று நட்டார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் ராஜசேகர் நன்றி கூறினார்.