Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தன்னை நேசிப்பவர் மதுவை தொடமாட்டார்: நடிகர் ராஜேஷ் பேச்சு

தன்னை நேசிப்பவர் மதுவை தொடமாட்டார்: நடிகர் ராஜேஷ் பேச்சு

தன்னை நேசிப்பவர் மதுவை தொடமாட்டார்: நடிகர் ராஜேஷ் பேச்சு

தன்னை நேசிப்பவர் மதுவை தொடமாட்டார்: நடிகர் ராஜேஷ் பேச்சு

ADDED : ஜூன் 30, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்:வெள்ளகோவில் மகாத்மா காந்தி அறக்கட்டளை சார்பில், 5வது ஆண்டு புத்தக கண்காட்சி, ஆர்.பி.எஸ்., மகாலில் நடந்து வருகிறது. இதில் நடிகர் ராஜேஷ் பேசியதாவது:

மனித உடல் என்பது செல்களால் அமைந்துள்ளது. மனிதன் உயிர் வாழ இந்த செல்கள் இயக்கம் தான் அடித்தளம். இந்த உடலில் ஒரு துளி மது சேர்ந்தால் 10 செல்கள் மரித்து விடும். இப்படி உடலின் ஒவ்வொரு உறுப்பும் தன் செயலை இழக்கும். மனிதன் வாழ்வை, உயிரை இழக்கிறான்.

உதாரணமாக 48 நாள் தொடர்ந்து மது அருந்தினால் 49வது நாள் கை கால் நடுக்கம் எடுத்து மதுவை தேடி ஓட வேண்டி வரும். மூளை நம்மை அப்படி செய்து விடும். பிரபஞ்சத்துக்கும் மூளைக்கும் தொடர்பு உள்ளது. நட்சத்திரம் 27; கிரகங்கள் 9; ராசிகள் 12. இவற்றைக் கூட்டினால் 48 வரும்.மனிதன் தன்னைத் தானே முதலில் நேசிக்க வேண்டும்.

அப்படி நேசிக்கும் யாரும் மதுவை அருந்தி தங்களை அழித்துக் கொள்ள மாட்டார்கள். தன்னை நேசிக்காதவன், மனைவி, குழந்தை, குடும்பம் என எதையும் நேசிக்க மாட்டான். எனவே யாரும் மதுவை நேசித்து விட வேண்டாம்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us