Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தாம்பரம் செல்ல ஏ.சி., ரயில்

தாம்பரம் செல்ல ஏ.சி., ரயில்

தாம்பரம் செல்ல ஏ.சி., ரயில்

தாம்பரம் செல்ல ஏ.சி., ரயில்

ADDED : ஜூன் 10, 2024 02:10 AM


Google News
பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க மங்களூரு - தாம்பரம் இடையே திங்கள், சனிக்கிழமைகளில் ஏ.சி., சிறப்பு ரயில் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (10ம் தேதி), வரும், 15ம் தேதி, மதியம், 12:00 மணிக்கு மங்களூருவில் புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06048) மறுநாள் அதிகாலை, 4:45க்கு சென்னை தாம்பரம் செல்லும். 14 ஏ.சி., பெட்டிகளை மட்டுமே கொண்ட இந்த ரயில், சனி மற்றும் திங்கள்கிழமைகளில் இரவு, 7:45க்கு திருப்பூர் ஸ்டேஷன் வரும்; ஈரோடு நோக்கி பயணிக்கும்.

மறுமார்க்கமாக வெள்ளி மற்றும் ஞாயிறு மதியம், 1:55 க்கு தாம்பரத்தில் புறப்பட்டு, மறுநாள் காலை, 6:55 க்கு மங்களூரு சென்றடையும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு, 9:35 க்கு திருப்பூரை கடந்து, இருகூர் வழியாக போத்தனுார் செல்லும்; சிறப்பு ரயில் கோவை ஜங்ஷன் செல்லாது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us