/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கால்களை பதம் பார்க்கும் கம்பி; பள்ளி முன் காத்திருக்கும் ஆபத்து கால்களை பதம் பார்க்கும் கம்பி; பள்ளி முன் காத்திருக்கும் ஆபத்து
கால்களை பதம் பார்க்கும் கம்பி; பள்ளி முன் காத்திருக்கும் ஆபத்து
கால்களை பதம் பார்க்கும் கம்பி; பள்ளி முன் காத்திருக்கும் ஆபத்து
கால்களை பதம் பார்க்கும் கம்பி; பள்ளி முன் காத்திருக்கும் ஆபத்து
ADDED : மார் 12, 2025 12:38 AM

திருப்பூர்; சின்னசாமியம்மாள் பள்ளி முன்புறம் நடைபாதையில் நீட்டிக் கொண்டிருக்கும் இரும்பு கம்பிகள் நடந்து செல்வோருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
திருப்பூர் மாநகராட்சி சார்பில், கொங்கு மெயின் ரோடு ஸ்மார்ட் சிட்டி ரோடாக அமைக்கப்பட்டுள்ளது. ரோட்டின் இரு புறங்களில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோட்டில் குறுக்கு ரோடுகள் சந்திக்கும் இடங்கள், பிரதான கட்டடங்கள் அமைந்துள்ள இடங்களில் நடைபாதையில் இடைவெளி விடப்பட்டுள்ளது.
நடைபாதை மீது வாகனங்கள் சென்று வருவதை தடுக்கும் வகையில், சிறிய வடிவிலான சிமென்ட் துாண்கள் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. அதில் சில இடங்களில் சேதமடைந்துள்ளன. சின்னசாமியம்மாள் பள்ளி வாசல் முன் உள்ள நடைபாதையில் உள்ள இந்த தடுப்பு துாண்கள் சேதமடைந்து பெயர்ந்து தனியாக காட்சியளிக்கிறது.
முற்றிலும் பெயர்ந்து போன துாணின் மீதமுள்ள இரும்பு கம்பிகள் தரையில் வெளியே நீட்டிக் கொண்டு ஆபத்தான முறையில் காணப்படுகிறது.
நடைபாதையில் நடந்து செல்லும் மாணவர்கள் பொதுமக்கள், இதனால் பாதிக்கப்படுகின்றனர். சேதமடைந்த சிமென்ட் தடுப்புகளை உடனே சீரமைக்க வேண்டும்.