ADDED : ஜூலை 08, 2024 10:26 PM
தாராபுரம், பொன்னாபுரம் கிராமத்தில் கார்பன் ஆலை (தேங்காய் கரிதொட்டி) அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஊராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அதே வளாகத்தில், 19 பேர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில், இரண்டாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக, இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது.