/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ துறை விட்டு துறை மாறும் மனு; சரியான பதில் இல்லாத குழப்பம் துறை விட்டு துறை மாறும் மனு; சரியான பதில் இல்லாத குழப்பம்
துறை விட்டு துறை மாறும் மனு; சரியான பதில் இல்லாத குழப்பம்
துறை விட்டு துறை மாறும் மனு; சரியான பதில் இல்லாத குழப்பம்
துறை விட்டு துறை மாறும் மனு; சரியான பதில் இல்லாத குழப்பம்
ADDED : ஜூலை 07, 2024 12:31 AM
பல்லடம்:பல்லடம், அண்ணா நகர் பகுதியில் நீர் ஆதார குட்டை உள்ளது. ஆக்கிரமிப்பில் உள்ள இக்குட்டையை மீட்டெடுத்து, துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தன்னார்வலர்கள் பலரும் கடந்த காலங்களில் வலியுறுத்தி உள்ளனர்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அண்ணா நகரை சேர்ந்த நாகூர் மீரான் என்பவர், கடந்த, 2019 முதல் குட்டையை துார்வார வலியுறுத்தி தொடர்ச்சியாக மனுக்கள் அளித்து வருகிறார். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், குட்டையை துார்வாருவது குறித்த மனுவுக்கு தீர்வு கிடைக்கவில்லை.
அவர் கூறியதாவது:
ஆண்டுதோறும் பருவ மழையின் போது அண்ணா நகர் குட்டை நிரம்பி குடியிருப்புகளை மழைநீர் செல்வது வழக்கமாக உள்ளது. இதனால், கனமழை பெய்யும் போது, விபத்து -உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி அண்ணா நகர் குட்டையை துார்வார வேண்டும் என, 2018ல் இருந்தே தொடர்ந்து மனு அளித்து வருகிறேன்.
பல்லடம் நகராட்சி, ஒன்றியம், வருவாய்த்துறை, கால்நடை, பொதுப்பணித்துறை என, நான் அனுப்பிய மனுக்களை மாறி மாறி அதிகாரிகள் தட்டிக்கழித்து வருகின்றனர். தொடர்ந்து, இது குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தேன். சம்பந்தமே இல்லாமல் ஆதிதிராவிடர் நலத்துறைக்கும் எனது மனு மாற்றப்பட்டது.
இவ்வாறு, குட்டையை துார் வாருவது யார் பொறுப்பு என்பதே தெரியாமல், மனுக்களை ஒவ்வொரு துறையாக மாறி மாறி அனுப்பி வருகின்றனர். மனுவின் மீது நடவடிக்கை எடுக்காமல் தட்டிக்கழிக்கும் அரசு நிர்வாகத்தின் இந்த போக்கு வேதனை அளிக்கிறது.
இவ்வாறு நாகூர் மீரான் கூறினார்.