/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வெயிலும் மழையும் கலந்தது இந்த வாரம் வெயிலும் மழையும் கலந்தது இந்த வாரம்
வெயிலும் மழையும் கலந்தது இந்த வாரம்
வெயிலும் மழையும் கலந்தது இந்த வாரம்
வெயிலும் மழையும் கலந்தது இந்த வாரம்
ADDED : ஜூன் 07, 2024 12:57 AM
திருப்பூர்;'திருப்பூரில் இந்த வாரம், வெயில், மழை என, மாறுபட்ட காலநிலை இருக்கும்' என, வானிலை மையம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, இந்திய வானிலைத்துறையின் கோவை, வேளாண் ஆராய்ச்சி மையம் இணைந்து, திருப்பூருக்கான வாராந்திர வானிலை அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.
அதன்படி, இந்த வாரம், திருப்பூரில், பகல் நேர வெப்பநிலை அதிகபட்சம், 33 முதல், 37 டிகிரி செல்சியஸ்; குறைந்தபட்ச வெப்பநிலை, 25 முதல், 27 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கும்.
காலை நேர காற்றின் ஈரப்பதம், 80 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 40 சதவீதமாகவும் இருக்கும். சராசரியாக, மணிக்கு, 20 முதல், 22 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும்; பெரும்பாலும் தென் மேற்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும். வரும் நாட்களில் மேற்கு மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் லேசானது முதல், மிதமான மழை பெய்ய வாய்ப்புண்டு.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.