/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நடைபாதையில் ஓட்டை பயணிகள் பரிதவிப்பு நடைபாதையில் ஓட்டை பயணிகள் பரிதவிப்பு
நடைபாதையில் ஓட்டை பயணிகள் பரிதவிப்பு
நடைபாதையில் ஓட்டை பயணிகள் பரிதவிப்பு
நடைபாதையில் ஓட்டை பயணிகள் பரிதவிப்பு
ADDED : ஜூன் 24, 2024 02:09 AM

பல்லடம்:பல்லடம் பஸ் ஸ்டாண்ட் கூட்ட நெரிசல் மிகுந்து, எந்நேரமும் பரபரப்பாக காணப்படும்.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் ஸ்டாண்ட் நடைபாதையில், ஓட்டைகள், பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், பஸ் ஏறுவதற்காக அவசர கதியில் வந்து செல்லும் பொதுமக்கள், ஓட்டைகள், பள்ளங்கள் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. கடைகள் மற்றும் அதிகப்படியான பொதுமக்கள் காத்திருக்கும் இடத்தில் இதுபோன்ற ஓட்டைகள் இருப்பதால், விபத்து ஏற்படும் முன் ஓட்டைகள், பள்ளங்களை அடைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.