/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'கிளாசிக் போலோ' இல்ல பசுமை திருமண விழா 'கிளாசிக் போலோ' இல்ல பசுமை திருமண விழா
'கிளாசிக் போலோ' இல்ல பசுமை திருமண விழா
'கிளாசிக் போலோ' இல்ல பசுமை திருமண விழா
'கிளாசிக் போலோ' இல்ல பசுமை திருமண விழா
ADDED : ஜூன் 12, 2024 01:48 AM
திருப்பூர்;'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிவராம் - ேஹமலதா தம்பதியரின் மகள் அக் ஷயாவுக்கும், அவிநாசி ஸ்ரீசுபம் டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் ஈஸ்வரன் - ராஜேஸ்வரி தம்பதியரின் மகன் தினேஷ்க்கும் திருமண வரவேற்புவிழா, நேற்றிரவு திருப்பூர், வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திருமண விழாவில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள், தொழில் துறையினர், பசுமை அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும், நேற்று இரண்டு திசு செவ்வாழை கன்றுகள் வழங்கப்பட்டன. அத்துடன் திசுவாழை வளர்ப்பு குறித்த துண்டு பிரசாரமும், அழகிய சணல் பைகளில் வைத்து வழங்கப்பட்டது. இன்று காலை திருமணம் நடக்கிறது.
விழாவில், விழா, பிளாஸ்டிக் கழிவு இல்லாத பசுமை நிகழ்ச்சியாக ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.