ADDED : ஜூன் 30, 2024 11:09 PM
திருப்பூர்;மாநில அரசின் கனவு இல்லம் திட்டத்துக்கான சிறப்பு கிராம சபா, பெருமாநல்லுாரில் தலைவர், துணை தலைவர் இல்லாமல் நடந்தது.
திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லுார் ஊராட்சி தலைவர் சாந்தாமணி; இவரது கணவர் வேலுசாமி, துணை தலைவராக இருக்கிறார். கடந்த சில மாதங்களாக, ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர் பொன்னுசாமிக்கும் இடையே, கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.அடிக்கடி, மாவட்ட நிர்வாகத்திடம் பரஸ்பரம் குற்றம்சாட்டி, மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில், நேற்றைய சிறப்பு கிராம சபா கூட்டத்தில், தலைவர், துணை தலைவர் பங்கேற்கவில்லை. இதன்காரணமாக, மூத்த உறுப்பினர் தலைமையில், சிறப்பு கிராமசபா கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டதாக, ஒன்றிய அலுவலர்கள் தெரிவித்தனர்.
*