/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தானியங்களை காய வைக்க உலர்களம் அமைக்கணும்தானியங்களை காய வைக்க உலர்களம் அமைக்கணும்
தானியங்களை காய வைக்க உலர்களம் அமைக்கணும்
தானியங்களை காய வைக்க உலர்களம் அமைக்கணும்
தானியங்களை காய வைக்க உலர்களம் அமைக்கணும்
ADDED : ஜூலை 20, 2024 12:23 AM
உடுமலை;உடுமலை பகுதியில், துவரை, உளுந்து, பாசிபயறு, கொள்ளு, கொண்டைக்கடலை, அவரை, தட்டை, மொச்சை என, பயறு வகை பயிர்கள், 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
விவசாயிகள் கூறியதாவது: சிறு, குறு விவசாயிகளே அதிகளவு தானிய சாகுபடியில், ஈடுபடுகின்றனர். அறுவடையின் போது, தானியங்களை பிரித்து, காய வைக்க, உலர்களங்கள் போதுமான அளவு இல்லை.
தானியங்களை காய வைத்து தரம் பிரித்தால் மட்டுமே, நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும். தற்காலிக தீர்வாக கிராமங்களிலுள்ள தார்ரோடுகளில், தார்ப்பாய் விரித்து தானியங்களை காய வைக்கிறோம்.
ஒழுங்கு முறை விற்பனை கூட உலர்களங்களுக்கு கொண்டு செல்ல, வாடகை மற்றும் கூலி எனஅதிக செலவாகிறது. எனவே, சாகுபடி பரப்பு அடிப்படையில், கிராமங்கள்தோறும், உலர்களங்கள் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, தெரிவித்தனர்.