/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆசிரியர் போட்டித்தேர்வு 759 பேர் எழுதினர் ஆசிரியர் போட்டித்தேர்வு 759 பேர் எழுதினர்
ஆசிரியர் போட்டித்தேர்வு 759 பேர் எழுதினர்
ஆசிரியர் போட்டித்தேர்வு 759 பேர் எழுதினர்
ஆசிரியர் போட்டித்தேர்வு 759 பேர் எழுதினர்
ADDED : ஜூலை 21, 2024 11:41 PM
திருப்பூர்:அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான, ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.
திருப்பூர் மாவட்டத்தில், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று மையங்களில் நேற்று போட்டித்தேர்வு நடைபெற்றது.
காலை, 10:00 மணிக்கு துவங்கிய தேர்வு, மதியம் 1:30 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 784 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. இவர்களில், 25 பேர் ஆப்சென்ட் ஆகினர்; மொத்தம் 759 பேர் தேர்வு எழுதினர்.