Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இயல்பை காட்டிலும் 62.03 மி.மீ, அதிக மழை

இயல்பை காட்டிலும் 62.03 மி.மீ, அதிக மழை

இயல்பை காட்டிலும் 62.03 மி.மீ, அதிக மழை

இயல்பை காட்டிலும் 62.03 மி.மீ, அதிக மழை

ADDED : ஜூலை 26, 2024 11:57 PM


Google News
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், நடப்பாண்டு இதுவரை இயல்பைவிட 62.03 மி.மீ., கூடுதல் மழை பெய்துள்ளது.

திருப்பூர் கலெக்டர் அலுவலக அரங்கில், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:

திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு, 618.20 மி.மீ., நடப்பாண்டில், இம்மாதம் முடிய சராசரியாக 198.20 மி.மீ., மழை பெய்வேண்டிய நிலையில், இதுவரை, 260.23 மி.மீ., மழை பெய்துள்ளது; இது, சராசரியை அளவைவிட, 62.03 மி.மீ., கூடுதல்.

மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான நெல், பயிறு, தானியங்கள், விதைகள் போதிய அளவு இருப்பு உள்ளது. 50.12 டன் நெல்; 14.23 டன் சிறுதானிய பயிறுகள்; 35.01 டன் பயிறு வகைகள்; 27.33 டன் எண்ணெய் வித்துக்கள் இருப்பு உள்ளது. யூரியா 2,929 டன், டி.ஏ.பி., 707 டன்; காம்ப்ளக்ஸ் 6080 டன்; சூப்பர் பாஸ்பேட் 745 டன் என, சாகுபடிக்கு தேவையான உரங்களும் இருப்பு உள்ளது.

இவ்வாறு, கலெக்டர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us