/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய டிரைவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய டிரைவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்
பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய டிரைவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்
பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய டிரைவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்
பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய டிரைவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்
ADDED : ஜூலை 26, 2024 10:15 PM

திருப்பூர்:மாரடைப்பால் உயிர் பிரியும் தருவாயிலும், பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய, பள்ளி பஸ் டிரைவர் குடும்பத்துக்கு, தமிழக அரசு, 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், கே.பி.சி.,நகரைச் சேர்ந்தவர் சேமலையப்பன், 48. அய்யனுார் அருகே தனியார் பள்ளி பஸ் டிரைவர். இவர், 24ம் தேதி மாலை பள்ளிக் குழந்தைகளை பஸ்சில் அழைத்துச் சென்றார்.
வெள்ளகோவில் போலீஸ் ஸ்டேஷன் அருகே, திருச்சி ரோட்டில் சென்ற போது, சேமலையப்பனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த போதும், குழந்தைகள் பஸ்சில் உள்ளதை எண்ணி, சிரமப்பட்டு, சாலையோரத்தில் பஸ்சை பாதுகாப்பாக நிறுத்தி விட்டார்.
பின், அப்படியே இருக்கையில் அமர்ந்த நிலையில் 'ஸ்டியரிங்'கில் சாய்ந்து இறந்து விட்டார். பஸ்சில் இருந்த, 20 குழந்தைகளும் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சேமலையப்பன் செயலுக்கு, தன் சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார்.
முதல்வர் உத்தரவின்படி, அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் டிரைவர் சேமலையப்பன் வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து, அரசின் காசோலை, 5 லட்சம் ரூபாயை வழங்கி, ஆறுதல் தெரிவித்தனர். பள்ளியில் அவருக்கு இரங்கல் கூட்டம் நடத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மனைவி கண் முன்னே...
பள்ளி பஸ் டிரைவராக சேமலையப்பன் பணியாற்றிய நிலையில், அதே பஸ்சில் உதவியாளராக அவரது மனைவி லலிதாவும் பணியாற்றியுள்ளார். மனைவி கண் முன்னே மாரடைப்பால் கணவர் இறந்துபோனது, அனைவரிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த சேமலையப்பனுக்கு, ஹரிஹரன், 17, ஹரிணி, 15 என இரு குழந்தைகள் உள்ளனர்.