/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ புத்தக கண்காட்சியை 40 ஆயிரம் பேர் பார்வை புத்தக கண்காட்சியை 40 ஆயிரம் பேர் பார்வை
புத்தக கண்காட்சியை 40 ஆயிரம் பேர் பார்வை
புத்தக கண்காட்சியை 40 ஆயிரம் பேர் பார்வை
புத்தக கண்காட்சியை 40 ஆயிரம் பேர் பார்வை
ADDED : ஜூலை 05, 2024 03:01 AM

திருப்பூர்;'வெள்ளகோவில் புத்தக கண்காட்சியை, 40 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.வெள்ளகோவில் மகாத்மா காந்தி அறக்கட்டளை சார்பில், 5வது புத்தக திருவிழா நடந்து முடிந்தது.
ஐந்து நாட்கள் நடந்த புத்தக கண்காட்சியில், 40 அரங்குகள் இடம் பெற்றிருந்தன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. வெள்ளகோவில் ஒன்றிய பகுதிகளில் உள்ள, 86 அரசு பள்ளிகள், 14 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரை புத்தக கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் வந்து செல்ல வாகன வசதியும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வாயிலாக செய்து கொடுக்கப்பட்டது. மாலை நேரங்களில் பிரபல பேச்சாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.வெள்ளகோவில் மகாத்மா காந்தி அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ''மாணவ, மாணவியர் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் புத்தக கண்காட்சியில், இந்தாண்டு, 40 ஆயிரம் பேர் பார்வையாளர்களாக வந்து சென்றனர்; 40 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடந்திருக்கும்,'' என்றார்.