ADDED : ஜூன் 18, 2024 11:29 PM

அவிநாசி:அவிநாசி அருகே சேவூர் - தண்டுக்காரன்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரிடம், 2019ல் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக, புதுச்சந்தை புக்கான் மூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதற்கு முன், 2016ல் இதே புக்கான் மூர்த்தி, வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, தப்பி மீண்டும் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு அவிநாசி ஜே.எம்., கோர்ட்டில் நடந்து வந்தது.
இவ்வழக்கில், புக்கான் மூர்த்திக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாஜிஸ்திரேட் வடிவேல், தீர்ப்பளித்தார். தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.