/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 4 டன் பாலிதீன் பொருள் பறிமுதல்:ரூ. 2.5 லட்சம் அபராதம் விதிப்பு 4 டன் பாலிதீன் பொருள் பறிமுதல்:ரூ. 2.5 லட்சம் அபராதம் விதிப்பு
4 டன் பாலிதீன் பொருள் பறிமுதல்:ரூ. 2.5 லட்சம் அபராதம் விதிப்பு
4 டன் பாலிதீன் பொருள் பறிமுதல்:ரூ. 2.5 லட்சம் அபராதம் விதிப்பு
4 டன் பாலிதீன் பொருள் பறிமுதல்:ரூ. 2.5 லட்சம் அபராதம் விதிப்பு
ADDED : ஜூலை 10, 2024 12:03 AM

திருப்பூர்:திருப்பூரில், ஆய்வு நடத்திய மாநகராட்சி சுகாதார பிரிவினர், ஏழு கடைகளில், மொத்தம், 4 டன் எடையுள்ள பாலிதீன் பொருட்கள் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில், பாலிதீன் விற்பனை குறித்து, சுகாதாரப் பிரிவினர் ஆய்வு நடத்தி, பறிமுதல் மற்றும் அபராத நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதன் விற்பனை ரகசியமாகவும், சில இடங்களில் பகிரங்கமாகவும் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை மாநகராட்சி உதவி கமிஷனர் வினோத், மாநகர் நல அலுவலர் கவுரி சரவணன் ஆகியோர் தலைமையில் சுகாதார பிரிவு அலுவலர்கள் முருகன், ராமகிருஷ்ணன், சின்னதுரை, தங்கமுத்து மற்றும் ஊழியர்கள் திடீர் ஆய்வு நடத்தினர்.
அரிசிக்கடை வீதி, கே.எஸ்.சி., பள்ளி வீதி கடைகளில், பாலிதீன் பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு நடந்தது. அப்பகுதியில், 20 கடைகளில் நடந்த ஆய்வின் போது, 7 கடைகளில் மொத்தம், 4 டன் எடையுள்ள பாலிதீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில், மூன்றாவது முறையாக பிடிபட்ட ஒரு கடைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஆறு கடைகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இது போல் செயல்படும் கடைகள் மீது 'சீல்' வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.