Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசு கல்லுாரிகளில் 2ம் கட்ட கலந்தாய்வு

அரசு கல்லுாரிகளில் 2ம் கட்ட கலந்தாய்வு

அரசு கல்லுாரிகளில் 2ம் கட்ட கலந்தாய்வு

அரசு கல்லுாரிகளில் 2ம் கட்ட கலந்தாய்வு

ADDED : ஜூன் 24, 2024 01:32 AM


Google News
திருப்பூர்;அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் இளநிலைப்பட்ட வகுப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று மற்றும் நடப்பு வாரத்தில் துவங்குகிறது.

திருப்பூர், சிக்கண்ணா கல்லுாரியில், மொத்தமுள்ள, 808 இடங்களில், 575 இடங்கள் இதுவரை நடந்த கலந்தாய்வு மூலம் நிரம்பியுள்ளது. இன்று காலை, 10:00 மணிக்கு மீதமுள்ள, 233 இடங் களுக்கு இரண்டாம் கட்ட கவுன்சிலிங் துவங்குகிறது.

திருப்பூர், எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில், 1,086 இடங்கள் உள்ளன. இன்று, 165 இடங்களுக்கு கலந்தாய்வு நடப்பதாக மாணவியருக்கு கல்லுாரி நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடம் அரசு கல்லுாரியில் மொத்த இடங்கள், 500. முதல் கவுன்சிலிங்கில், 412 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதமுள்ள 88 இடங்களுக்கு (கணிதம் உட்பட பிற துறைகளுக்கு) இன்று இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது.

தாராபுரம் அரசு கலைக்கல்லுாரியில், 230 இடங்கள் உள்ளன. முதல் கட்ட கலந்தாய்வில் 135 இடங்கள் பூர்த்தியாகியுள்ளன. பி.காம்., படிப்பில் அதிக மாணவர்கள் இணைந்துள்ளனர். பி.எஸ்.சி., வணிகம் பாடத்தில் குறைந்தளவு மாணவர்களே இணைந்துள்ளனர். இன்று, 65 இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

அவிநாசி அரசு கலைக்கல்லுாரியில், 364 இடங்களில், 173 இடங்கள் சிறப்பு ஒதுக்கீடு மற்றும் முதல் கலந்தாய்வில் பூர்த்தியாகி விட்டது. மீதமுள்ள, 191 இடங்களுக்கு வரும், 26ம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது.

அரசு கல்லுாரிகளில், இன்றும், வரும் நாட்களிலும் துவங்கும் கலந்தாய்வு வரும் 29ம் தேதி வரை நடக்கிறது. மீதமுள்ள இடங்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு, சேர்க்கை செயல்பாடுகள் முடிவுற்று, ஜூலை, 3ம் தேதி முதல் வாரம் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கு வகுப்புகள் துவங்க உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us