/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குழியில் புதைத்து வைத்த 26 கிலோ குட்கா சிக்கியது குழியில் புதைத்து வைத்த 26 கிலோ குட்கா சிக்கியது
குழியில் புதைத்து வைத்த 26 கிலோ குட்கா சிக்கியது
குழியில் புதைத்து வைத்த 26 கிலோ குட்கா சிக்கியது
குழியில் புதைத்து வைத்த 26 கிலோ குட்கா சிக்கியது
ADDED : ஜூன் 30, 2024 12:21 AM
பல்லடம்:பல்லடம் அருகே கல்லம்பாளையத்தைச் சேர்ந்தவர் லோகநாதன், 60; மளிகை வியாபாரி. குட்கா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், நேற்று இவரது மளிகை கடையில் பல்லடம் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு எதுவும் சிக்காத நிலையில், தொடர்ந்து, இவரது தோட்டத்தில் ஆய்வு செய்தனர் தோட்டத்துக்குள் குழி தோண்டி குட்கா பொருட்களை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம், 26 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, லோகநாதனை கைது செய்தனர்.