/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 2ம் நாள் கலந்தாய்வில் 231 மாணவர்கள் சேர்க்கை 2ம் நாள் கலந்தாய்வில் 231 மாணவர்கள் சேர்க்கை
2ம் நாள் கலந்தாய்வில் 231 மாணவர்கள் சேர்க்கை
2ம் நாள் கலந்தாய்வில் 231 மாணவர்கள் சேர்க்கை
2ம் நாள் கலந்தாய்வில் 231 மாணவர்கள் சேர்க்கை
ADDED : ஜூன் 12, 2024 12:08 AM

உடுமலை;உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இரண்டாம் நாள் கலந்தாய்வில், 231 மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்டது.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று முன்தினம் துவங்கியது.
இரண்டாம் நாளான நேற்று தரவரிசைப்பட்டியல், 2,001 முதல், 4,000 வரை மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர்.
இயற்பியல் பாடப்பிரிவில் 8, வேதியியலில் - 18, தாவரவியலில் - 11, கணிதவியலில் - 5, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் - 34, அரசியல் அறிவியல் பாடத்தில் - 17, புள்ளியியல் பாடத்தில் - 9, பொருளியல் பாடத்தில் - 24, பி.காம்., பாடப்பிரிவில் - 36, பி.காம்., (சிஏ) - 23, பி.காம் .,(இ.காம்) - 23, பி.பி.ஏ., பாடப்பிரிவில் - 23 என மொத்தமாக, 231 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
முதல் நாள் கலந்தாய்வில், 266 என, தற்போது வரை மொத்தமாக, 497 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்று, 4,001 முதல், 6,000 வரையிலான தரவரிசை உள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.