ADDED : ஜூலை 31, 2024 01:08 AM
அவிநாசி;அவிநாசி அருகே தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், 43. இவரின் வீட்டில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் பதுக்கி வைத்திருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே போலீசார் சென்று சோதனை செய்ததில், 21 கிலோ ஹான்ஸ், குட்காவை பறிமுதல் செய்து, சீனிவாசனை கைது செய்தனர். இதேபோல் உப்பிலிபாளையத்திலுள்ள மளிகை கடையில், ஒரு கிலோ ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.