/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வாழ்க்கையை மாற்றப் போகும் 180 நிமிடம்; டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவோருக்கு அற்புத ஆலோசனைகள் வாழ்க்கையை மாற்றப் போகும் 180 நிமிடம்; டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவோருக்கு அற்புத ஆலோசனைகள்
வாழ்க்கையை மாற்றப் போகும் 180 நிமிடம்; டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவோருக்கு அற்புத ஆலோசனைகள்
வாழ்க்கையை மாற்றப் போகும் 180 நிமிடம்; டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவோருக்கு அற்புத ஆலோசனைகள்
வாழ்க்கையை மாற்றப் போகும் 180 நிமிடம்; டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவோருக்கு அற்புத ஆலோசனைகள்
வேண்டாம் சந்தேகம்
'பிரின்ட் அவுட்' எடுக்கப்பட்ட 'ஹால் டிக்கெட்', இரண்டு 'பால் பாயின்ட்' பேனா, ஆதார் கார்டு அல்லது புகைப்படத்துடன் கூடிய ஏதாவது ஒரு அடையாள அட்டை எடுத்து செல்ல வேண்டும். ஓ.எம்.ஆர்., விடைத்தாளை பூர்த்தி செய்வது குறித்து சந்தேகம் இருந்தால், அறை கண்காணிப்பாளரிடம் கேட்டு தெளிவுப்படுத்திக்கொண்ட பின், விடைத்தாளை பூர்த்தி செய்ய வேண்டும்.
வினாவுக்குள் விடை
தமிழ் பாடப்பகுதி வினாக்களுக்கு அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் விடையளித்து விட வேண்டும். 'ஆப்டிடியூட்' பகுதியில், சில சமயம் சில கணக்குகளை நீண்ட நேரம் செய்து பார்க்க வேண்டியிருக்கும். அதுபோன்ற வினாக்களுக்கு, நீண்ட நேரம் எடுத்துக் கொள்ள வேண்டாம்; கடைசியாக கூட செய்து கொள்ளலாம்.
வரிசை தவறக்கூடாது
இயன்றவரை வரிசையாக, அனைத்து வினாக்களுக்கும் விடையளித்து விடுவது நல்லது. உதாரணமாக, 15வது கேள்வியை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என விட்டு விட்டு, 16வது கேள்விக்கு விடை எழுதும் போது, அதற்கான விடையை விடைத்தாளில், 15வது கேள்வியில் தவறுதலாக குறித்து விடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு விடும்.
கண்கள் ஏமாறும்
ஒவ்வொரு வினாவையும், நன்றாக புரிந்து விடையளிக்க வேண்டும். சில வினாக்கள் பார்த்த மாத்திரத்தில் கண்களை ஏமாற்றி விடும். உதாரணமாக, 'கீழ்க்கண்ட நுால்களில் பாரதியார் எழுதாத நுால் எது?' என கேட்கப்பட்டிருக்கும். ஆனால், முதல் பார்வையில் 'பாரதியார் எழுதிய நுால் எது' என தெரிய வாய்ப்பிருக்கிறது.