/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மனமகிழ் மன்றம் அகற்ற 15 நாள் அவகாசம் மனமகிழ் மன்றம் அகற்ற 15 நாள் அவகாசம்
மனமகிழ் மன்றம் அகற்ற 15 நாள் அவகாசம்
மனமகிழ் மன்றம் அகற்ற 15 நாள் அவகாசம்
மனமகிழ் மன்றம் அகற்ற 15 நாள் அவகாசம்
ADDED : ஜூலை 19, 2024 01:07 AM

அவிநாசி:அவிநாசி - சேவூர் ரோட்டில் சிந்தாமணி பஸ் ஸ்டாப்பில் உள்ள மனமகிழ் மன்றத்தை அகற்ற, 15 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று, அனைத்துக் கட்சி சார்பில் மனமகிழ் மன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பா.ஜ., மற்றும் அவிநாசி அனைத்து வணிகர் சங்கம் சார்பிலும் பல கட்ட தொடர் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து ஆலோசிக்க, டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் போலீஸ் ஸ்டேஷனில் அனைத்து கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் ராஜவேல் வரவேற்றார்.
மனமகிழ் மன்றத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு மாவட்ட வருவாய் மற்றும் போலீசார் தரப்பில் வரும் 3ம் தேதி வரை (15 நாட்கள்) கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அதுவரை சட்டம் ஒழுங்கு பாதுகாத்திடும் விதமாக எந்த ஒரு போராட்டமும், முற்றுகையும் மனமகிழ் மன்றம் முன் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, சிவப்பிரகாஷ் (தி.மு.க.,), ஈஸ்வரமூர்த்தி (மா.கம்யூ.,), சண்முகம் (இ.கம்யூ.,), தினேஷ்குமார் (பா.ஜ.,), பாபு (ம.தி.மு.க.,), மணி (ஆ.த.பேரவை), பேரூராட்சி கவுன்சிலர்கள் கோபால கிருஷ்ணன், தங்கவேலு உட்பட பலர் பங்கேற்றனர்.