/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஸ்ரீதொட்டைய சுவாமி கோவிலில் 12ம் தேதி கும்பாபிேஷக விழா ஸ்ரீதொட்டைய சுவாமி கோவிலில் 12ம் தேதி கும்பாபிேஷக விழா
ஸ்ரீதொட்டைய சுவாமி கோவிலில் 12ம் தேதி கும்பாபிேஷக விழா
ஸ்ரீதொட்டைய சுவாமி கோவிலில் 12ம் தேதி கும்பாபிேஷக விழா
ஸ்ரீதொட்டைய சுவாமி கோவிலில் 12ம் தேதி கும்பாபிேஷக விழா
ADDED : ஜூலை 09, 2024 10:52 PM
திருப்பூர்:நல்லகட்டிபாளையம் ஸ்ரீதொட்டைய சுவாமி கோவில் கும்பாபிேஷக விழா, 12ம் தேதி நடைபெற உள்ளது.
ஊத்துக்குளி ஒன்றியம், மொரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லகட்டிபாளையத்தில், ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீதொட்டைய சுவாமி கோவில் மற்றும் ராஜகோபுர அஷ்ட பந்த கும்பாபிேஷக விழா நாளை நடக்கிறது.
கடந்த, 7ம் தேதி விக்னேஸ்வரர் பூஜை, கிராம சாந்தியும், 8 ம் தேதி கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், வாஸ்துசாந்தி, காப்பு கட்டும் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, சிறப்பு வழிபாடுகளுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. வரும், 12ம் தேதி வரை, ஐந்து கால வேள்வி பூஜைகள் நடக்கின்றன.
வரும், 12ம் தேதி காலை 6:30 மணிக்கு, 6ம் கால வேள்வி பூஜை; காலை, 9:15 மணிக்கு ராஜகோபுர கும்பாபிேஷகமும், 9:45 மணிக்கு, கும்பாபிேஷகம், தசதானம், தசதரிசன பூஜைகள் நடக்கின்றன. காலை, 11:00 மணிக்கு மகா அபிேஷகம், தீபாராதனையும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெற உள்ளது. கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை,கோவில் நிர்வாகக்குழுவினரும், விழாக்குழுவினரும், மாளவக்குல மக்களும் செய்து வருகின்றனர்.