/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 12 கோரிக்கையை வலியுறுத்தி மின் ஊழியர்கள் போராட்டம் 12 கோரிக்கையை வலியுறுத்தி மின் ஊழியர்கள் போராட்டம்
12 கோரிக்கையை வலியுறுத்தி மின் ஊழியர்கள் போராட்டம்
12 கோரிக்கையை வலியுறுத்தி மின் ஊழியர்கள் போராட்டம்
12 கோரிக்கையை வலியுறுத்தி மின் ஊழியர்கள் போராட்டம்
ADDED : ஜூலை 09, 2024 10:48 PM

திருப்பூர்;பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் நேற்று, காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும்; முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்துசெய்துவிட்டு, புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். பணப்பயன்களை தாமதமின்றி வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல், மின் வாரியத்திலும், ஐந்து லட்சம் குடும்ப நலநிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று காத்திருப்பு போராட்டம் துவங்கியது.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.,) சார்பில், திருப்பூர் மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், போராட்டம் துவங்கியுள்ளது. பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், பகுதிநேர ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.
திட்ட பொருளாளர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் நாகராஜ், கோரிக்கையை விளக்கி பேசினார். சி.ஐ.டி.யு., செயற்குழு உறுப்பினர் பாலன், செயலாளர் ரங்கராஜன் உள்ளிட்டோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினர். மாநில குழு முடிவின்படி, அடுத்தகட்ட போராட்டம் குறித்து தீர்மானிக்கப்படும் என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பி.எம்.எஸ்.,
ஆர்ப்பாட்டம் ரத்து
மின் கணக்கீட்டாளர் இடமாறுதல் தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி, பாரதீய மின் தொழிலாளர் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. கோட்ட செயற்பொறியாளர் அழைப்பின் பேரில், மாநில செயலாளர் கதிர்வேல், திட்ட செயல் தலைவர் பாலகிருஷ்ணன், திட்ட செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பூபதி, கோட்ட தலைவர் ராஜேஸ்குமார், கோட்ட செயலாளர் மாரியப்பன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அமைதி பேச்சில், கோரிக்கைகள் பரிசீலித்து நிறைவேற்றப்படும் என, அதிகாரி உறுதி அளித்ததால், நேற்று நடப்பதாக இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது.