/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உழவர் சந்தையில் ஒரு மாதத்தில் ரூ.10.45 கோடிக்கு காய்கறி விற்பனை உழவர் சந்தையில் ஒரு மாதத்தில் ரூ.10.45 கோடிக்கு காய்கறி விற்பனை
உழவர் சந்தையில் ஒரு மாதத்தில் ரூ.10.45 கோடிக்கு காய்கறி விற்பனை
உழவர் சந்தையில் ஒரு மாதத்தில் ரூ.10.45 கோடிக்கு காய்கறி விற்பனை
உழவர் சந்தையில் ஒரு மாதத்தில் ரூ.10.45 கோடிக்கு காய்கறி விற்பனை
ADDED : ஜூலை 06, 2024 10:28 PM
திருப்பூர்:திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தையில் கடந்த ஜூன் மாதத்தில், 10.45 கோடி ரூபாய்க்கு காய்கறி வர்த்தகம் நடந்துள்ளது.
புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள வடக்கு உழவர் சந்தையில், ஜூன் மாதத்தில், 744.20 மெட்ரிக் டன் காய்கறி விற்பனையாகியுள்ளது. மூன்று கோடியே, 22 லட்சத்து, 75 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. விளை பொருட்களை, 2,769 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். வாடிக்கையாளர்களாக, 93 ஆயிரம் பேர் வருகை புரிந்துள்ளனர்.
ஜூன் மாதத்தில், தென்னம்பாளையத்தில் உள்ள தெற்கு உழவர் சந்தைக்கு 1,936 டன் காய்கறிகள் வரத்தாக இருந்தது. காய்கறி, பழங்கள், கீரை வகை என பல்வேறு விதமான விளை பொருட்களுடன், 8,900 விவசாயிகளும், 1.14 லட்சம் வாடிக்கையாளர்களும் சந்தைக்கு வருகை புரிந்தனர். முப்பது நாட்களில், ஏழு கோடியே, 22 லட்சத்து, 45 ஆயிரத்து, 700 ரூபாய்க்கு காய்கறி விற்பனையாகியுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு இரண்டு சந்தைகளுக்கும் சேர்த்து, 10.45 கோடிக்கு காய்கறி வர்த்தகம் நடந்துள்ளது.
நிர்ணயிக்கும் தக்காளி
பிற காய்கறிகளை தக்காளி வரத்தே சந்தையில் பிரதானமாக உள்ளது. கடந்த ஜூன் துவக்கத்தில் சந்தைக்கான தக்காளி வரத்து வெகுவாக குறைந்தது. மூன்றல் ஒரு பங்கு தக்காளி மட்டுமே வரத்தாக இருந்த நிலையில், கிலோ, 65 முதல், 85 ரூபாய் வரை விற்றதால், விற்பனையும் மட்டுப்பட்டது. வரத்து அதிகமாகி, விலை இயல்பாக இருந்தால், இன்னமும் வருவாய் அதிகரித்திருக்கும் என உழவர் சந்தை அலுவலர்கள் தெரிவித்தனர்.