/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ துணைத்தேர்வு நிறைவு 1,020 பேர் 'ஆப்சென்ட் ' துணைத்தேர்வு நிறைவு 1,020 பேர் 'ஆப்சென்ட் '
துணைத்தேர்வு நிறைவு 1,020 பேர் 'ஆப்சென்ட் '
துணைத்தேர்வு நிறைவு 1,020 பேர் 'ஆப்சென்ட் '
துணைத்தேர்வு நிறைவு 1,020 பேர் 'ஆப்சென்ட் '
ADDED : ஜூலை 10, 2024 01:52 AM
உடுமலை;பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், மே, 10ல் வெளியானது. மாவட்டத்தில் தேர்வெழுதிய, 30 ஆயிரத்து, 180 பேரில், 27 ஆயிரத்து 879 பேர் தேர்ச்சி பெற்றனர்; 2,301 பேர் தேர்ச்சி பெறவில்லை.
முந்தைய ஆண்டு, 11வது இடம் பெற்ற திருப்பூர், பத்து இடங்கள் பின்தங்கி, 21வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
ஒரே பள்ளியில் அதிக மாணவ, மாணவியர் தேர்ச்சி பெறாததே தேர்ச்சி சதவீதம் சரிய காரணமென பள்ளி கல்வித்துறையினர் கண்டறிந்தனர்.
அப்பள்ளிக்கு சென்ற மாவட்ட கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர், ஆசிரியர் உள்ளிட்டோருக்கு அறிவுரை வழங்கி, தேர்ச்சி பெறாத மாணவரை துணைத்தேர்வு தயார்படுத்த அறிவுறுத்தினர்.
விண்ணப்பித்து, மாணவர்கள் துணைத்தேர்வில் பங்கேற்று, அடுத்தடுத்த வகுப்புகளுக்கு சென்று உயர்கல்வி பயில வேண்டும் என மாவட்ட கல்வித்துறை தொடர் அறிவுரைகளை வழங்கி வந்தது.
இந்நிலையில் கடந்த, 2ம் தேதி பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு மாவட்டத்தின், 11 மையங்களில் துவங்கியது; தேர்வுக்கு விண்ணப்பித்த, 5,928 பேரில், மாணவர், தனித்தேர்வர் உட்பட, 1,020 பேர் தேர்வுக்கு வரவில்லை. 4,908 பேர் தேர்வெழுதினர்.
நேற்று முன்தினத்துடன், துணைத்தேர்வு நிறைவு பெற்றது. விண்ணப்பித்த மாணவர்களில், 83 சதவீதம் பேர் தேர்வெழுதினர்; 17 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.