/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சிலிண்டர் வெடித்து தீ விபத்து 10 கடைகள் எரிந்து சேதம் சிலிண்டர் வெடித்து தீ விபத்து 10 கடைகள் எரிந்து சேதம்
சிலிண்டர் வெடித்து தீ விபத்து 10 கடைகள் எரிந்து சேதம்
சிலிண்டர் வெடித்து தீ விபத்து 10 கடைகள் எரிந்து சேதம்
சிலிண்டர் வெடித்து தீ விபத்து 10 கடைகள் எரிந்து சேதம்
ADDED : ஜூலை 11, 2024 08:25 PM
திருச்சி,:திருச்சி மாவட்டம், துறையூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, சின்ன ஏரிக்கரையில், 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில், அங்கமுத்து என்பவரது ஹோட்டலில், நேற்று முன்தினம் நள்ளிரவு, திடீரென சிலிண்டர் வெடித்து தீப்பிடித்துள்ளது.
தொடர்ந்து, அருகில் இருந்த டயர் கடை, செருப்பு கடை மற்றும் டெய்லர் கடை உட்பட 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தீ பரவியது. துறையூர் மற்றும் உப்பிலியபுரம் தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைத்தனர்.
இருப்பினும், தீ பரவியதில், மூன்று பைக்குகள் உட்பட சில கடைகளில் இருந்த பொருட்களும் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தில், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. விபத்தால், துறையூர் பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.