Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ பள்ளி வளாகத்தில் மழைநீர்; கண்டித்து பெற்றோர் போராட்டம்

பள்ளி வளாகத்தில் மழைநீர்; கண்டித்து பெற்றோர் போராட்டம்

பள்ளி வளாகத்தில் மழைநீர்; கண்டித்து பெற்றோர் போராட்டம்

பள்ளி வளாகத்தில் மழைநீர்; கண்டித்து பெற்றோர் போராட்டம்

ADDED : அக் 07, 2025 07:31 AM


Google News
Latest Tamil News
வாணியம்பாடி : திருப்பத்துார் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், வாணியம்பாடி நியூ டவுன் காந்தி நகர், அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி மாணவர்கள், ஆசிரியர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

மேலும், 3 நாட்களாக இரவில் பெய்யும் மழையால், பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதில் ஆத்திரமடைந்த பெற்றோர், நேற்று காலை, மழைநீரை அகற்றக்கோரி, தங்கள் குழந்தைகளுடன் பள்ளிக்கு பூட்டு போட்டு, நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் வாணியம்பாடி டவுன் போலீசார், பேச்சு நடத்தி, பள்ளி வளாகத்தில் இனி மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

கோவிலுக்குள் மழைநீர் கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றி உள்ள பகுதியில் நேற்று முன்தினம், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், கடை வீதி மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் இருந்து அதிகளவு மழைநீர் வெளியேறியது.

இந்த மழைநீர், பூவராக சுவாமி கோவிலின் முன்புறம் பிரதான வாயில் வழியாக கோவிலுக்குள் புகுந்து, குழந்தையம்மன் சன்னிதியில் முழங்கால் அளவிற்கு தேங்கியதால், பக்தர்கள் அவதி அடைந்தனர்.

அதேபோல, திருவண்ணாமலை மாவட்டம், கமண்டலாற்றின் குறுக்கே அமைந்துள்ள செண்பகதோப்பு அணை, தற்போது பெய்து வரும் மழையால் வேகமாக நிரம்பி வருவதால், நேற்று மாலை, 3:00 மணி முதல், அணையிலிருந்து 150 கன அடி நீர் திறக்கப்பட்டது.

அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே, கொட்டகை சுவர் இடிந்து விழுந்ததில், 20 ஆடுகளும், மத்துார் அருகே மின்னல் தாக்கி, எட்டு ஆடுகளும் பலியாகின.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us