/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ 8 பேர் பலியான விவகாரம் பல் மருத்துவமனைக்கு 'சீல்' 8 பேர் பலியான விவகாரம் பல் மருத்துவமனைக்கு 'சீல்'
8 பேர் பலியான விவகாரம் பல் மருத்துவமனைக்கு 'சீல்'
8 பேர் பலியான விவகாரம் பல் மருத்துவமனைக்கு 'சீல்'
8 பேர் பலியான விவகாரம் பல் மருத்துவமனைக்கு 'சீல்'
ADDED : ஜூன் 04, 2025 01:05 AM
வாணியம்பாடி:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் டாக்டர் அறிவரசன் நடத்திய வி.டி.எஸ்., தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, 8 பேர் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு இறந்ததாக சர்ச்சை எழுந்தது. திருப்பத்துார் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞானமீனாட்சி விசாரணை நடத்தினார்.
விளக்கம் அளிக்க சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பினார். டாக்டர் அறிவரசன் கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல எனக்கூறி, நேற்று பல் மருத்துவமனைக்கு, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞானமீனாட்சி மற்றும் வாணியம்பாடி தாசில்தார் உமாரம்யா தலைமையிலான வருவாய்த்துறையினர், 'சீல்' வைத்தனர்.
ஞானமீனாட்சி கூறுகையில், ''பல் மருத்துவமனையில், 8 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து, டாக்டர் அறிவரசனுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பினோம். அவர் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லாததால் மருத்துவமனைக்கு, சீல் வைக்கப்பட்டது. டென்டல் கவுன்சிலுக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டு, டாக்டர் அறிவரசன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளோம்,'' என்றார்.