/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ மாமியார் வீட்டுக்கு சென்ற மருமகள் ரயில் மோதி பலி மாமியார் வீட்டுக்கு சென்ற மருமகள் ரயில் மோதி பலி
மாமியார் வீட்டுக்கு சென்ற மருமகள் ரயில் மோதி பலி
மாமியார் வீட்டுக்கு சென்ற மருமகள் ரயில் மோதி பலி
மாமியார் வீட்டுக்கு சென்ற மருமகள் ரயில் மோதி பலி
ADDED : செப் 23, 2025 02:11 AM
ஜோலார்பேட்டை, திருப்பத்துார் அருகே மாமியார் வீட்டுக்கு சென்ற மருமகள், ரயில் மோதி பலியானார்.
திருப்பத்துார் அடுத்த கந்திலி கும்மிடிகாம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார், 50. இவரது மனைவி சாந்தி, 45. தம்பதிக்கு இரு மகன்கள். நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை அடுத்த புளியங்கொட்டை கிராமத்திலுள்ள தன் மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் வீடு திரும்பினார்.
அப்போது, ஜோலார்பேட்டை - திருப்பத்துார் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே பாச்சல் பகுதியிலுள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அவ்வழியாக சென்ற பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், சாந்தி துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.