/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ பெண்ணுக்கு தொந்தரவு அர்ச்சகருக்கு 'காப்பு' பெண்ணுக்கு தொந்தரவு அர்ச்சகருக்கு 'காப்பு'
பெண்ணுக்கு தொந்தரவு அர்ச்சகருக்கு 'காப்பு'
பெண்ணுக்கு தொந்தரவு அர்ச்சகருக்கு 'காப்பு'
பெண்ணுக்கு தொந்தரவு அர்ச்சகருக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 10, 2025 05:34 AM
ஆம்பூர் : திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள நாகநாதசுவாமி கோவில் அர்ச்சகர் தியாகராஜன், 40. இவர், கோவிலில் உழவாரப் பணியில் ஈடுபட்ட, 30 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
பாதிக்கப்பட்ட பெண், திருப்பத்துார் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். ஆம்பூர் மகளிர் போலீசார், தியாகராஜன் மீது வழக்கு பதிந்த நிலையில், அவர் தலைமறைவானார்.
நேற்று காலை, புதுச்சேரியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த தியாகராஜனை போலீசார் கைது செய்தனர்.