/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ விவசாயியிடம் ரூ.57.14 லட்சம் மோசடி பெண்கள் உள்பட 3 பேர் கைது விவசாயியிடம் ரூ.57.14 லட்சம் மோசடி பெண்கள் உள்பட 3 பேர் கைது
விவசாயியிடம் ரூ.57.14 லட்சம் மோசடி பெண்கள் உள்பட 3 பேர் கைது
விவசாயியிடம் ரூ.57.14 லட்சம் மோசடி பெண்கள் உள்பட 3 பேர் கைது
விவசாயியிடம் ரூ.57.14 லட்சம் மோசடி பெண்கள் உள்பட 3 பேர் கைது
ADDED : ஜூன் 23, 2025 05:55 AM
கந்திகுப்பம்: தனியார் அறக்கட்டளை மூலம் கடன் வாங்கி தருவதாக விவ-சாயியிடம், 57.14 லட்சம் ரூபாய் மோசடி செய்த, இரு பெண்கள்
உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம் நாட்றம்பாளையம் அருகே, பெரி-யண்ண வட்ட அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 44, விவ-சாயி; திருப்பத்துார் ஊசிக்கல்மேட்டை சேர்ந்தவர் புவனேஸ்வரி, 35; இவரின் கணவர்
லட்சுமணன். இவரும் சீனிவாசனும் நண்பர்கள்.
சீனிவாசனை தொடர்பு கொண்ட, புவனேஸ்வரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், பையம்பட்டி கூட்ரோடு அஸ்-வினி, 29, இவரது கணவர் விவேகானந்தன், 32, ஆகியோர், திருப்பத்துார் மற்றும் கரூரில் இயங்கி வரும் ஒரு அறக்கட்டளை வங்கி கணக்கில், 3.50 லட்சம் ரூபாய் வரவு வைத்தால், 35 லட்சம் ரூபாயை கடனாக அறக்கட்டளை வழங்கும் என கூறி-யுள்ளனர். இதை நம்பிய சீனிவாசன், 57.14 லட்சம் ரூபாயை, பல்வேறு தவணைகளில் அறக்கட்டளை வங்கி கணக்கில் செலுத்தினார்.
கடன் வழங்காததால் கந்திகுப்பம் போலீசில் புகாரளித்தார். விசாரித்த போலீசார், புவனேஸ்வரி, அஸ்வினி, அவரது கணவர் விவேகானந்தனை கைது செய்தனர். அறக்கட்டளை செயலாளர் ஷீலா மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.