/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ 4 மாத கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது 4 மாத கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது
4 மாத கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது
4 மாத கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது
4 மாத கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது
ADDED : ஜூன் 11, 2024 07:46 PM
திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, கர்ப்பிணியை மனைவியை கத்தியால் குத்திய கணவனை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், காவலுார் அடுத்த வீரராக வலசையை சேர்ந்தவர் விஜயகுமார், 27; ஆலங்காயத்திலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வருகிறார். இவர் மனைவி சுபாஷினி, 21; இவர்களுக்கு திருமணமாகி, 3 ஆண்டுகயான நிலையில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சுபாஷினி மீண்டும், 4 மாத கர்ப்பமான நிலையில், நேற்று முன்தினம் மாலை தம்பதிக்குள் குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இது குறித்து காவலுார் போலீசில் சுபாஷினி புகார் செய்தார். போலீசார் சமரசம் செய்து அனுப்பினர்.
இதில் மன உளைச்சல் அடைந்த விஜயகுமார், வீட்டிற்கு வந்து சுபாஷினி வயிற்றில் கத்தியால் குத்தினார். அக்கம் பக்கத்தினர் சுபாஷினியை மீட்டு, வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். காவலுார் போலீசார், விஜயகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.