/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ சாலையோர கடை இட்லியை சாப்பிட்ட 8 பேர் வாந்தி, மயக்கம் சாலையோர கடை இட்லியை சாப்பிட்ட 8 பேர் வாந்தி, மயக்கம்
சாலையோர கடை இட்லியை சாப்பிட்ட 8 பேர் வாந்தி, மயக்கம்
சாலையோர கடை இட்லியை சாப்பிட்ட 8 பேர் வாந்தி, மயக்கம்
சாலையோர கடை இட்லியை சாப்பிட்ட 8 பேர் வாந்தி, மயக்கம்
ADDED : ஜூலை 12, 2024 08:40 PM
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாலையோர டிபன் கடையில், பத்தாப்பேட்டையை சேர்ந்த சுபாஷ் என்பவர் இட்லி வாங்கி சென்றார். இதை அவரது குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட எட்டு பேர் சாப்பிட்டனர். அப்போது திடீரென சிறுவர்கள் வாந்தி எடுத்து மயக்கமடைந்தனர். பின்னர் சுபாஷ், சாலையோர கடையில் வாங்கி வந்த இட்லியை பார்த்தபோது, அதில் பல்லி இருப்பது தெரிவயந்தது. உடனடியாக சுபாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் எட்டு பேரும், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.