/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ கொல்லப்பட்ட ரவுடியின் மனைவி துாக்கிட்டு தற்கொலை கொல்லப்பட்ட ரவுடியின் மனைவி துாக்கிட்டு தற்கொலை
கொல்லப்பட்ட ரவுடியின் மனைவி துாக்கிட்டு தற்கொலை
கொல்லப்பட்ட ரவுடியின் மனைவி துாக்கிட்டு தற்கொலை
கொல்லப்பட்ட ரவுடியின் மனைவி துாக்கிட்டு தற்கொலை
ADDED : செப் 15, 2025 02:07 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி ரவுடியின் மனைவி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
துாத்துக்குடி மாவட்டம், பெரியார்நகரை சேர்ந்தவர் மதன், 28. இவரது மனைவி மோனிஷா, 24. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மதன், ஜூலை, 15ல் சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகே மனைவியுடன் உணவகத்தில் இருந்தபோது, ஒரு கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில், மோனிஷா முக்கிய சாட்சியாக இருந்தார். மதன் கொலையை நேரில் பார்த்ததால் மோனிஷா மனமுடைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தந்தை வீட்டில் இருந்த மோனிஷா, நேற்று முன்தினம் இரவு பெரியார்நகரில் உள்ள மதன் வீட்டிற்கு சென்று அங்கு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாளமுத்துநகர் போலீசார் விசாரிக்கின்றனர். ரவுடி கொலை வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும்நிலையில், முக்கிய சாட்சியாக இருந்த மோனிஷாவை யாரேனும் மிரட்டினரா என போலீசார் விசாரிக்கின்றனர்.