ADDED : ஜன 04, 2024 12:46 AM
தூத்துக்குடி:தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் 9வது தளத்தில் நிலக்கரி இறக்கும் பணிகள் நடந்தது. தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவன சூபர்வைசர் இசக்கிமுத்து 39, அங்கு பணியில் இருந்தார். அங்கு பழுதாகி நிறுத்தப்பட்டிருந்த நிலக்கரி ஏற்றும் பொக்லைன் இயந்திரம் திடீரென சரிந்ததில் அதன் அருகில் நின்ற இசக்கிமுத்து இடுபாடுகளுக்குள் சிக்கி பலியானார். தெர்மல்நகர் போலீசார் விசாரித்தனர்.
இசக்கிமுத்துவின் மனைவி சில மாதங்களுக்கு முன் உடல்நலம் பாதித்து இறந்தார். 9ம் வகுப்பு பயிலும் அவரது மகள் தற்போது தந்தை, தாய் இருவரையும் இழந்துள்ளார்.