/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கரும்புச்சாறு கடைக்கு பட்டதாரிகள் தேவையாம்!: ரூ.18 ஆயிரம் சம்பளம்: வைரலாகும் பேனர்கரும்புச்சாறு கடைக்கு பட்டதாரிகள் தேவையாம்!: ரூ.18 ஆயிரம் சம்பளம்: வைரலாகும் பேனர்
கரும்புச்சாறு கடைக்கு பட்டதாரிகள் தேவையாம்!: ரூ.18 ஆயிரம் சம்பளம்: வைரலாகும் பேனர்
கரும்புச்சாறு கடைக்கு பட்டதாரிகள் தேவையாம்!: ரூ.18 ஆயிரம் சம்பளம்: வைரலாகும் பேனர்
கரும்புச்சாறு கடைக்கு பட்டதாரிகள் தேவையாம்!: ரூ.18 ஆயிரம் சம்பளம்: வைரலாகும் பேனர்
UPDATED : ஜூலை 19, 2024 04:52 PM
ADDED : ஜூலை 19, 2024 04:48 PM

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே புதிதாக தொடங்க உள்ள கரும்புச்சாறு கடையில் வேலைக்கு பிஇ, பிஏ, பி.எஸ்சி பட்டதாரிகள் தேவை என்றும், சம்பளம் 18 ஆயிரம் எனவும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள பேனர் வைரலாகியுள்ளது.
தற்போது பல்வேறு தொழில்கள் பெருகி வருகின்றன. எனினும் பழைய காலம் போல மக்களிடம் உடல் உழைப்பு என்பது குறைந்து வருகிறது. இயந்திரங்களில் மூலம் பணி நடந்தாலும் பணிபுரிய சொற்ப நபர்களே தேவையென்றாலும் அதற்கும் வேலையாட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வட மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வேலைக்கு குவிந்து வருகின்றனர். மேலும் பலர் தாங்கள் படித்த படிப்பிற்கேற்ற வேலை தான் பார்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பதால் பல துறைகளில் வேலையாட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெய்ஞானபுரத்தில் புதிதாக தொடங்க உள்ள கரும்பு கடை ஒன்றில் வைத்துள்ள பேனர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த பேனரில் கரும்புச்சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை; சம்பளம் ரூ.18 ஆயிரம், வேலை நேரம் காலை 8:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் அதற்கான கல்வி தகுதி பிஇ, பிஏ, பி.எஸ்சி என்றும், வயது வரம்பு 25 முதல் 40 வரை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேனர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.