ADDED : மார் 23, 2025 01:45 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் சமீப காலமாக கடல் ஆமைகள் அதிகளவு இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. துாத்துக்குடி முள்ளக்காடு பஞ்சாயத்திற்குட்பட்ட கோவளம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமை ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. வனத்துறையினர் ஆய்வு நடத்தினர்.
ஆலிவ் ரெட்லி வகை ஆமை, இனப்பெருக்கத்திற்காக கரைக்கு வந்தபோது மீனவர்களின் வலைகளில் சிக்கி இறந்திருக்கலாம் என, அவர்கள் கூறினர். திருச்செந்துார் அருகே வீரபாண்டியபட்டினம் கடற்கரையில் இறந்த நிலையில் ஆமை ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. ஆமையை வனத்துறையினர் கைப்பற்றினர்.
மூன்று மாதங்களில் மட்டும் துாத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன. உரிய ஆய்வு நடத்தி ஆமைகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.