/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ ஆயுதங்களுடன் 'ரீல்ஸ்' 3 வாலிபர்களுக்கு 'காப்பு' ஆயுதங்களுடன் 'ரீல்ஸ்' 3 வாலிபர்களுக்கு 'காப்பு'
ஆயுதங்களுடன் 'ரீல்ஸ்' 3 வாலிபர்களுக்கு 'காப்பு'
ஆயுதங்களுடன் 'ரீல்ஸ்' 3 வாலிபர்களுக்கு 'காப்பு'
ஆயுதங்களுடன் 'ரீல்ஸ்' 3 வாலிபர்களுக்கு 'காப்பு'
ADDED : செப் 11, 2025 03:22 AM
துாத்துக்குடி,:கையில் ஆயுதங்களுடன், சமூக வலை தளங்களில் 'ரீல்ஸ்' வெளியிட்ட, மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மூன்று வாலிபர்கள் மற்றும் நான்கு இளம் சிறார்கள் கையில் அரிவாள், வாள் வைத்து, சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டது தெரிந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய கோவில்பட்டி கிழக்கு போலீசார், புதுக்கிராமத்தை சேர்ந்த சக்திவேல், 23, வ.உ.சி., நகரைச் சேர்ந்த சபேஸ்வரன், 19, தாமஸ் நகரைச் சேர்ந்த பிரவீன், 19, ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், 18 வயது நிரம்பாத நான்கு இளம் சிறார்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில், வீடியோ பதிவிட்டால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.