/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ தனியார் வங்கி ரூ.36.95 லட்சம் இழப்பீடு தர உத்தரவு தனியார் வங்கி ரூ.36.95 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
தனியார் வங்கி ரூ.36.95 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
தனியார் வங்கி ரூ.36.95 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
தனியார் வங்கி ரூ.36.95 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
ADDED : மே 14, 2025 01:35 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி, போல்டன்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் விமல் ராஜேஷ்ராஜ், 35, வீடு கட்ட தனியார் வங்கியில் கடன் பெற்றார். அதற்கு, இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். உடல் நலமின்றி விமல் ராஜேஷ்ராஜ் இறந்தார்.
கடனை தள்ளுபடி செய்ய, அவரது மனைவி லாவண்யா, வங்கி நிர்வாகத்திடம் கோரினார். வங்கி நிர்வாகம் மறுத்ததால், துாத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் திருநீல பிரசாத், கடன் நிலுவை தொகைகளை தள்ளுபடி செய்யவும், இறப்பு காப்பீட்டு தொகையான, 35 லட்சத்து 85,000 ரூபாய், சேவை குறைபாடு, மன உளைச்சலுக்கு ஒரு லட்சம் ரூபாய், வழக்கு செலவு தொகை, 10,000 ரூபாய் என, மொத்தம், 36 லட்சத்து 95,000 ரூபாயை ௨ மாதத்திற்குள் வழங்க உத்தரவிட்டார்.