ADDED : மார் 23, 2025 01:48 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி, முத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் டொமினிக் அண்டோ மனைவி மரிய அன்பரசி, 37; தனியார் மருத்துவமனை செவிலியர்.
இவர், திருச்செந்துார் -- துாத்துக்குடி சாலையில் நேற்று மாலை, 'யமஹா பேசினோ' மொபட்டில் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த லாரி மோதி, அவர் உயிரிழந்தார்.
முத்தையாபுரம் போலீசார், கரூர் குளித்தலை, கொப்பாளப்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் உதயகுமார், 38, என்பவரை கைது செய்தனர்.