/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ ஜாதி ரீதியான ஆபாச கருத்து பேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது ஜாதி ரீதியான ஆபாச கருத்து பேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது
ஜாதி ரீதியான ஆபாச கருத்து பேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது
ஜாதி ரீதியான ஆபாச கருத்து பேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது
ஜாதி ரீதியான ஆபாச கருத்து பேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது
ADDED : மார் 21, 2025 03:01 AM

துாத்துக்குடி:பேஸ்புக் பக்கத்தில் ஜாதி ரீதியான ஆபாச கருத்துகளையும், அரசியல் தலைவர்கள் குறித்து அவதுாறகவும் பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சலவையர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன், 33, என்பவர் முகநூல் பக்கத்தில் தொடர்ந்து அவதுாறான வீடியோக்களை பதிவு செய்வதாக புகார் எழுந்தது. முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி., குறித்து பேசிய அவர் தற்கொலை செய்து கொண்டால் என் சாவுக்கு அவர்கள்தான் காரணம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மார்ச்18ம் தேதி வெளியிட்ட வீடியோவில் அம்பேத்கர், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் குறித்தும், ஜாதி குறித்தும் ஆபாசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து, வி.சி.க., திருச்செந்துார் நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
வழக்குப் பதிவு செய்த திருச்செந்துார் குற்றப்பிரிவு போலீசார் கேரளாவில் பதுங்கி இருந்த மணிகண்டனை நேற்று அதிகாலை கைது செய்தனர். ஏற்கனவே, அவதுாறான கருத்துகளுடன் வீடியோ வெளியிட்டதாக இரண்டு முறை மணிகண்டன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.