/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/நிலவில் சர்வதேச விண்வெளி மையம்: சொல்கிறார் மயில்சாமி அண்ணாதுரைநிலவில் சர்வதேச விண்வெளி மையம்: சொல்கிறார் மயில்சாமி அண்ணாதுரை
நிலவில் சர்வதேச விண்வெளி மையம்: சொல்கிறார் மயில்சாமி அண்ணாதுரை
நிலவில் சர்வதேச விண்வெளி மையம்: சொல்கிறார் மயில்சாமி அண்ணாதுரை
நிலவில் சர்வதேச விண்வெளி மையம்: சொல்கிறார் மயில்சாமி அண்ணாதுரை
ADDED : ஜூலை 21, 2024 05:59 PM

தூத்துக்குடி: நிலாவில் சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதற்கான திறன் நமக்கு (இந்தியா) இருக்கிறது என முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றி அதற்கு மரியாதை செலுத்தும் போது நம்முடைய தேசியக் கொடி மேலே உயர்த்த நாம் செயல்பட வேண்டும் என்பதை குழந்தைகள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
நிலா மற்றும் செவ்வாயில் இந்திய தேசியக் கொடியை நிலை நிறுத்துவதற்கான வாய்ப்பினை நான் உருவாக்க வேண்டும் என்று குழந்தைகள் நினைக்க வேண்டும். நிலாவில் சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதற்கான திறன் நமக்கு (இந்தியா) இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.