/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ திருச்செந்துார் கோவில் குறித்து அவதுாறு; ஹிந்து முன்னணி நிர்வாகி கைது திருச்செந்துார் கோவில் குறித்து அவதுாறு; ஹிந்து முன்னணி நிர்வாகி கைது
திருச்செந்துார் கோவில் குறித்து அவதுாறு; ஹிந்து முன்னணி நிர்வாகி கைது
திருச்செந்துார் கோவில் குறித்து அவதுாறு; ஹிந்து முன்னணி நிர்வாகி கைது
திருச்செந்துார் கோவில் குறித்து அவதுாறு; ஹிந்து முன்னணி நிர்வாகி கைது
ADDED : செப் 22, 2025 07:09 AM

துாத்துக்குடி; திருச்செந்துார் கோவில் நிர்வாகம் குறித்து அவதுாறு பரப்பியதாக ஹிந்து முன்னணி நிர்வாகியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருச்செந்துார் கோவில் குறித்து, சமூக வலைதளங்களில் தொடர்ந்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதால், கோவில் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பக்தர்களிடம் பணம் பெற்று கொண்டு, கோவில் சண்முகவிலாசம் மண்டபம் வழியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் தகவல் வெளியிடப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக, கோவில் உள்துறை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி என்பவர், திருச்செந்துார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணை நடத்திய போலீசார், திருச்செந்துாரை சேர்ந்த ஹிந்து முன்னணி நகர துணை தலைவர் செந்தில்குமார், 34, மணிகண்டன், பிரித்திவிராஜ் ஆகிய மூவர் மீது வழக்கு பதிந்தனர்.
நேற்று காலை, கோவில் வளாகத்தில் நின்று கொண்டிருந்த செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர். மணிகண்டன், என்பவர் சமீபத்தில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.