/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ காதல் தகராறில் எலக்ட்ரீஷியன் ஓட ஓட வெட்டிக்கொலை காதல் தகராறில் எலக்ட்ரீஷியன் ஓட ஓட வெட்டிக்கொலை
காதல் தகராறில் எலக்ட்ரீஷியன் ஓட ஓட வெட்டிக்கொலை
காதல் தகராறில் எலக்ட்ரீஷியன் ஓட ஓட வெட்டிக்கொலை
காதல் தகராறில் எலக்ட்ரீஷியன் ஓட ஓட வெட்டிக்கொலை
ADDED : செப் 23, 2025 06:29 AM

திருச்செந்துார்; காதல் தகராறில் எலக்ட்ரீஷியன் ஓட ஓட விரட்டி, வெட்டி கொலை செய்யப்பட்டார்.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரை சேர்ந்தவர் மணிகண்டன், 28; எலக்ட்ரீஷியன். ஆலந்தலை சுனாமி காலனியில் வாடகை வீட்டில் குடியிருந்தார். குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழாவிற்காக விரதம் இருந்து வந்தார்.
நேற்று பைக்கில் மணிகண்டன், தோப்பூர் விலக்கில் சென்று கொண்டிருந்தபோது, மூன்று பேர் கொண்ட கும்பல், அவரை வழிமறித்து ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பியது. திருச்செந்துார் தாலுகா போலீசார் விசாரித்தனர். இதில், திருச்செந்துார் வீரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நட்டார், 48, அவரது உறவினர் கணேசன், 30, மூன்று இளம் சிறார்கள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
மணிகண்டன், 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாகவும், சில மாதங்களுக்கு முன் அவரை வெளியூர் அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில், மணிகண்டன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.