/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/துாத்துக்குடி சி.எஸ்.ஐ., அலுவலகத்தில் மோதல்துாத்துக்குடி சி.எஸ்.ஐ., அலுவலகத்தில் மோதல்
துாத்துக்குடி சி.எஸ்.ஐ., அலுவலகத்தில் மோதல்
துாத்துக்குடி சி.எஸ்.ஐ., அலுவலகத்தில் மோதல்
துாத்துக்குடி சி.எஸ்.ஐ., அலுவலகத்தில் மோதல்
ADDED : ஜன 03, 2024 11:08 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி சி.எஸ்.ஐ., திருமண்டல அலுவலகத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
சி.எஸ்.ஐ., தென்னிந்திய திருச்சபை துாத்துக்குடி - -நாசரேத் திருமண்டல அலுவலகம் துாத்துக்குடி கால்டுவெல் பள்ளி வளாகத்தில் உள்ளது. திருமண்டலத்தை நிர்வகிப்பதில் இரு தரப்பாக செயல்படுகின்றனர். அங்கு பொருளாளராக பணியாற்றிய மோகன் என்பவர் அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மீண்டும் பணியில் தொடர ஆணை பெற்றதாக கூறி நேற்று திருமண்டல அலுவலகம் வந்தார்.
அவரது பணியிடத்தில் புதிதாக டேவிட் ராஜன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே அலுவலகத்தில் கைகலப்பு ,மோதல் ஏற்பட்டது. துாத்துக்குடி வடபாகம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.