/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ தி.மு.க., நிர்வாகி உட்பட 4 பேர் சிலை கடத்த முயன்று சிக்கினர் தி.மு.க., நிர்வாகி உட்பட 4 பேர் சிலை கடத்த முயன்று சிக்கினர்
தி.மு.க., நிர்வாகி உட்பட 4 பேர் சிலை கடத்த முயன்று சிக்கினர்
தி.மு.க., நிர்வாகி உட்பட 4 பேர் சிலை கடத்த முயன்று சிக்கினர்
தி.மு.க., நிர்வாகி உட்பட 4 பேர் சிலை கடத்த முயன்று சிக்கினர்
ADDED : மே 16, 2025 07:17 AM

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்த அம்மன் சிலையை மீட்ட போலீசார், தி.மு.க., நிர்வாகி உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.
'துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பகுதியில், கிடங்கு ஒன்றில் பழமையான சிலை பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இச்சிலையை வெளிநாட்டிற்கு கடத்த முயற்சி நடக்கிறது' என, திருநெல்வேலி மண்டல சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, பழமையான 2 அடி உயரமுள்ள, அம்மன் சிலையை மீட்டனர்.
இச்சிலையை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற, ஓட்டப்பிடாரம் அடுத்த முப்பிலிவெட்டி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ், மேட்டூரை சேர்ந்த வெற்றிவேல், சாமிநத்தம் கிராமத்தை சேர்ந்த பிரதாப், தங்கசதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களில் விக்னேஷ் தி.மு.க., இளைஞர் அணி ஒன்றிய நிர்வாகியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.